கோஆப்ரேட் பண்ணாத மாமியார் .. கடுப்பான மருமகனின் வெறிச்செயல்

கோவை பேரூர் அருகே வீட்டின் பத்திரத்தை கொடுக்க மறுத்த மாமியாரை மருமகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் குப்பனூரை சேர்ந்தவர் சாந்தாமணி, இவரது மகள் மோகனபிரியா, மற்றும் மருமகன் சதாசிவத்தோடு வசித்து வந்தார்.

இந்நிலையில் சதாசிவம் சாந்தாமணியின் வீட்டு பத்திரத்தை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று சாதாசிவம் மீண்டும் பத்திரத்தை கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதில் சாந்தாமணி பத்திரத்தை கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த சாதாசிவம், அருகில் இருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சதாசிவத்தை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.