4ஆம் தர பேச்சாளர் போல் கீழ்த்தரமாக பேசியுள்ளார் பிரதமர்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி 4ஆம் தர பேச்சாளர் போல் கீழ்த்தரமாக பேசிவிட்டு சென்றிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஒருவர் கூட வெற்றி பெறக்கூடாது என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி 4ஆம் தர பேச்சாளர் போல் கீழ்த்தரமாக பேசிவிட்டு சென்றிருப்பதாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக பழனியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சராக இருக்க கூடிய சீனிவாசன் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார். திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் அதை மேம்படுத்த எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குறை கூறிய ஸ்டாலின். கருத்துக்கணிப்புகளை நம்பி தொண்டர்கள் அசட்டையோடு இருக்க கூடாது என்றார்.அதிமுக பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது எனவும் ஸ்டாலின் கூறினார்.

 

Back to top button