ரெம்டிசிவிர் மருந்தை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த இருவர் கைது…

சென்னை கிண்டி அருகே ரெம்டிசிவிர் மருந்தை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் ரெம்டிசிவர் மருந்து அதிகவிலைக்கு விற்கப்படுவதாக சிவில் சப்ளை சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள், நடத்திய சோதனையில், ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த மருத்துவர் ராம்சுந்தர் மற்றும் ஊழியர் கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 ரெம்டிசிவிர் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரெம்டெசிவர் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Back to top button