தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். ‘மதராசபட்டினம்’, ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’, ‘ஆம்பள’, ‘தேவி’, ‘ரெமோ’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம், வடிவேலு, யோகி பாபு, சூரி வரிசையில் ஹீரோவாக களம் இறங்குகிறார் நடிகர் சதீஷ்.. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கி கொண்டிருந்த இவர், தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சதீஷ் நாயகனாக, பவித்ரா லட்சுமி நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறுகிறது.
இந்தப் படத்தின் பூஜையில் ஏஜிஎஸ் நிறுவனக் குழுவினருடன் படக்குழுவினரும் பங்கேற்றார்கள். மேலும், சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
#AgsEntertainment is happy to announce our next film @Ags_production #21
#KalpathiAghoram#KalpathiGanesh #KalpathiSuresh @aishkalpathi @actorsathish @itspavitralaksh @KishoreRajkumar @venkat_manickam @ajesh_ashok @praveenzaiyan @Ram_Pandian_90#MGMurugan @onlynikil pic.twitter.com/oiGMRS7NSD— Archana Kalpathi (@archanakalpathi) April 7, 2021