பெரிய சிஐடி… கண்டுபிடிச்சிட்டாரு…ட்விட்டரில் பிரியா பவானி சங்கர் வாக்குவாதம்…

ட்விட்டரில் தன்னை விமர்சித்தவர்களுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஊடகத்துறையில் இருந்த அவர் சின்னத்திரை அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ மற்றும் சிம்புவின் ‘பத்து தல’ உள்ளிட்ட சில படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன், எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு இணையவாசி ஒருவர் “மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு தானா?” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், ”பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொருவர் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், க்ளவுட் நைன் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களில் பட வாய்ப்பு பெறுவதற்காக தான் பிரியா இப்படி ட்வீட் செய்துக் கொண்டிருக்கிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஆவேசமடைந்த பிரியா “ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல” என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Back to top button