இந்தியாவை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது… பிரபல வீரர் வேதனை

இந்தியாவின் நிலையை எண்ணி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தலைவிரித்தாடுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பு, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என இந்தியாவே திண்டாடி வருகிறது.

இதனிடையே ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் கொரோனா பரவியதால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில். ”நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி துயரத்தில் வீழ்ந்திருப்பதைப் பார்க்கும் போது என் இதயம் நொறுங்குகிறது, நிச்சயம் இந்தியா இதனைக் கடந்து வந்து விடும். இதிலிருந்து மீளும் போது இன்னும் வலுவான தேசமாக மீண்டெழுவாய். இந்த நெருக்கடி காலத்திலும் உனது அன்பும், பெருந்தன்மையும் கவனிக்கப்படாமல் போய் விடாது. இன்கிரெடிபிள் இந்தியா” என பதிவிட்டுள்ளார்.

Back to top button